Events

குழந்தைகளுக்கான வாராந்திர நிகழ்வுகள்
Weekly Events for Kids
👉 குழந்தைகளுக்கான சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் பயிற்சிகள் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமை தோறும் காலை 11.30 மணிக்கு நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வுகளில், கதை சொல்லுதல், ஆரோக்கியம், இசை, ஓவியம், சதுரங்கம் போன்ற பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அனைத்தும் துறைசார்ந்த வல்லுநர்கள் மூலம் நடத்தப்பட்டு வருகின்றன.
      
👉 Special programs and trainings for children are held every Sunday at 11.30 am. In these events, various skill development trainings such as storytelling, health, music, painting, chess, etc. are conducted by experts in the field.
நூல் அரும்புகள் (குழந்தைகள் புத்தக விமர்சனத்திற்கான நிகழ்வுகள்)
Nool Arumbugal (Events for Children Book Review)
👉 சிறுவர்களின் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வண்ணம் 17.03.2024 முதல் “நூல் அரும்புகள்” என்ற சிறுவர் நூல் விமர்சனம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் சிறுவர்கள் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் உள்ள ஏதேனும் ஒரு நூலைப் படித்து, அதைப் பற்றிய கருத்துக்களை விமர்சனம் செய்யலாம். இந்நிகழ்வில் பங்கு பெறும் சிறுவர்களுக்கு பரிசும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.
      
👉 A children's book review program, "Nool Arumbugal," will be held starting from March 17, 2024, to encourage children to develop a reading habit. As part of this program, children can read any book from the Kalaignar Centenary Library and share their opinions about it. Participants in the program will receive prizes and certificates of appreciation for their contributions.
      
வாரந்தோறும் சிறார் திரைப்படம்
Weekly Children's Movie
👉 வாரந்தோறும் சனிக்கிழமை மாலை 4 மணிக்கு குழந்தைகளுக்கான சிறப்பு திரைப்படம் திரையிடல் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
      
👉 Every Saturday at 4 PM, special film screening and discussion events for children are being conducted.
      
குழந்தைகளுக்கான சதுரங்கப் பயிற்சி
Chess@KCL
👉 ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை 5:30 மணிக்கு, குழந்தைகளுக்கான தொடர் சதுரங்கப் பயிற்சி அமர்வுகள் நடத்தப்படுகின்றன. கூடுதலாக, பார்வையற்ற நபர்களுக்கான சதுரங்கப் பயிற்சி ஒவ்வொரு இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளிலும் காலை 11:00 மணிக்கு நடத்தப்படுகிறது.
      
👉 Every Saturday at 5:30 PM, a series of chess training sessions is conducted for children. Additionally, chess training for Visually Challenged individuals is held every second and fourth Saturday at 11:00 AM.
      
போட்டித்தேர்வு மாணவர்களுக்கான நிகழ்ச்சிகள்
Sigaram Thodu (Events for Competitive Exam Aspirants)
👉 போட்டித்தேர்வு மாணவர்களுக்கான தொடர் நிகழ்ச்சிகள் மற்றும் பயிற்சிகள் துறை சார்ந்த வல்லுநர்களைக்கொண்டு நடத்தப்பட்டு வருகின்றது.
      
👉 A series of programs and training sessions titled "Sigaram Thodu" is specifically designed for competitive exams aspirants. These sessions are led by subject experts or professionals from relevant fields, providing specialized guidance and preparation for the students.
      
நிலவொளியில்
Nilavozhiyil (In the Moonlight)
👉 ஒவ்வொரு பெளர்ணமி அன்றும் மாலை 6.30 மணிக்கு, படைப்பாளிகள், இலக்கிய ஆர்வலர்கள், வாசகர்கள், மாணவர்கள் ஆகிய அனைவரும் பங்கு பெறும் வகையில் இலக்கியம் சார்ந்த கலந்துரையாடல் நான்காவது தளத்தில் அமைந்துள்ள மாடியில் நடைபெற்று வருகிறது.
      
👉 On every full moon day at 6:30 PM, a literary discussions involving creators, literary enthusiasts, readers and students are held on the terrace garden located on the fourth floor.       
இளையோர்களம் - களம் புதிது! கனவு பெரிது!
Ilaiyor Kalam (Youth Domain)
👉 கலைஞர் நூற்றாண்டு நூலகம், மதுரையில் “இளையோர் களம்” என்ற நிகழ்ச்சி, வெள்ளிக் கிழமைகள் தோறும் மாலை 5.00 மணிக்கு நடைபெற்று வருகிறது. இளைஞர்களின் திறமைகளுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் இந்த நிகழ்வு, ஒன்பதாம் வகுப்பு முதல் கல்லூரியில் இறுதியாண்டு வரை படிக்கும் மாணவர்களுக்கானது. இந்நிகழ்வில் நூல் திறனாய்வு /விமர்சனம், நூல் அறிமுகம், நூலக அனுபவம், கவிதை-பாடல் போன்ற திறமைகள் அரங்கேற்றம், புதிய கண்டுபிடிப்புகள் -தொழில்நுட்பங்கள் மற்றும் உலகளாவிய பிரச்சனைகள் குறித்த உரைகள் இடம்பெறும்.
      
👉 The "Ilayor Kalam" program is held every Friday at 5:00 PM at the Kalaignar Centenary Library in Madurai. This event serves as a platform for showcasing the talents of young individuals and is open to students from the ninth standard to the final year of college. The program includes book reviews and critiques, book introductions, library experiences, and various talent performances such as poetry recitations, songs, speeches on new innovations, emerging technologies, and global issues.
      
யாதுமாகி - பெண்களுக்கான சிறப்பு நிகழ்வு
"Yaadhumagi"(Events for Women)
👉 கலைஞர் நூற்றாண்டு நூலககத்தின் ”யாதுமாகி நின்றாய் சக்தி” என்ற பெண்களுக்கான சிறப்பு நிகழ்வுகள் மாதந்தோறும் மூன்றாவது சனிக்கிழமை மாலை 6.00 மணி அளவில் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வில் ஆரோக்கியம்,சமூக விழிப்புணர்வு, மகளிர் பாதுகாப்பு, தனித்திறமை, நம்பிக்கையை வளர்ப்பது, மேடை பேச்சு, அனுபவ கலந்துரையாடல்,மொழித்திறனை மேம்படுத்துதல், சமூகசேவை, தோட்டகலை குறித்த நிகழ்வுகள் அனைத்தும் துறைசார்ந்த வல்லுநர்கள் மூலம் நடத்தப்பட்டு வருகின்றன.
      
👉 The "Yadumagi Nindhiai Shakti" special event for women at the Kalaignar Centenary Library is held on the third Saturday of every month at 6:00 PM. This event features expert-led sessions on various topics, including health, social awareness, women's safety, personal skill development, confidence building, public speaking, experiential discussions, language improvement, social service, and gardening.
      
“வேர்கள்” - மூத்த குடிமக்களுக்கான நிகழ்வு
“Vergal” (Roots)
👉 கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் “வேர்கள்” என்ற மூத்த குடிமக்களுக்கான நிகழ்ச்சி மாதந்தோறும் நான்காவது சனிக்கிழமை காலை 11.00 மணி அளவில் நடைபெறவிருக்கிறது. இந்நிகழ்வில் உடல் நலம், அனுபவம் பகிர்வு, நிதி மேலாண்மை உள்ளிட்ட நிகழ்வுகள் அனைத்தும் நடைபெறும். இதில் மூத்த குடிமக்கள் அனைவரும் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்ளலாம்.
      
👉 The "Roots" program for senior citizens at the Kalaignar Centenary Library will be held on the fourth Saturday of every month at 11:00 AM. The program will feature activities related to health, experience sharing, and financial management. All senior citizens are welcome to participate and share their experiences.
      
முத்தமிழ் முற்றம்
Muthamizh Mutram
👉 தமிழ் புத்தகங்கள் பிரிவில், தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கியம் தொடர்பான தலைப்புகளை மையமாகக் கொண்டு, “முத்தமிழ் முற்றம்” என்ற தலைப்பில் பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.
      
👉 In the Tamil Books section, various events are being organized under the theme "Mutthamizh Mutram," highlighting topics related to the Tamil language and literature.
      
இன்று
Indru (Today)
👉 "இன்று" என்ற தலைப்பில் ஒவ்வொரு மாதமும் மறைந்த தமிழ் எழுத்தாளர்களின் எழுத்துக்களை சிறப்பு செய்யும் வகையில் அவர்கள் படைப்புக்களை கலந்துரையாடி நினைவலைகளாக பகிர்வது இரண்டாவது தளத்தில் நடைபெற்று வருகிறது.
      
👉 The title "Indru" refers to monthly discussions and sharing of the works of deceased Tamil writers, held on the second floor (Tamil section) on the anniversary of their death, in a way that honors their creations.
      
அரையாண்டு மற்றும் கோடை விடுமுறை சிறப்பு நிகழ்வுகள்
Special Programs during Half-yearly and Summer Vacations
👉 மாணவர்கள் தம் விடுமுறையினை பயனுள்ள வகையில் பயன்படுத்தும் வகையில் குழந்தைகளுக்கான பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் பயிற்சி பட்டறைகள் நடைபெற்று வருகின்றன.
      
👉 To utilize their free time effectively and engage in meaningful learning experiences or skill development activities, various special events and workshops are being conducted for children during their vacation periods.
      
KCL Expresso
👉 KCL Expresso நிகழ்வில் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு துறைகளில் முக்கிய தலைப்புகளில் பாட வல்லுநர்களால் சிறப்பு சொற்பொழிவுகள் நடத்தப்படுகின்றன.
      
👉 KCL Expresso organizes special lectures by subject experts on important topics across various fields to benefit students, researchers, and the general public.
      
முக்கிய தினங்களில் சிறப்பு நிகழ்வுகளு
Special Events on Important Days
👉 கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் நூலக தினம், மாற்றுத்திறனாளிகள் தினம், தை திருநாள்,மகளிர் தினம்,யோகா தினம், உலக சுற்றுச் சூழல் தினம் போன்ற முக்கிய தினங்கள் மற்றும் புகழ்பெற்ற எழுத்தாளர்கள், அறிவியலறிஞர்களின் பிறந்த நாள் போன்ற தினங்களில் வாசகர்களுக்கான சிறப்பு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
      
👉 Special events are organized for readers at the Kalaignar Centenary Library on significant occasions, including Library Day, International Day of Persons with Disabilities, Thai Thirunal, International Women's Day, International Yoga Day, World Environment Day, and the birthdays of renowned writers and scientists.
      
ஆய்வாளர் அரங்கம் (ஆராய்ச்சி மன்றம்)
Aaivaalar Arangam (The Research Forum)
👉 ஆராய்ச்சி அறிஞர்கள் தங்கள் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்கும் "ஆய்வாளர் அரங்கம்" நிகழ்வு, ஒவ்வொரு மாற்று புதன்கிழமையும் மாலை 4:00 மணிக்கு நடைபெறும்.
      
👉 The "Aaivaalar Arangam" event, where the research scholars present their research papers, is held every alternate Wednesday at 4:00 PM.
      
கலை பட்டறை (நுண்கலை பற்றிய பட்டறைகள்)
Kalai Pattarai (Workshops on Fine Arts)
👉 மாணவர்கள் தம் விடுமுறையினை பயனுள்ள வகையில் பயன்படுத்தும் வகையில் குழந்தைகளுக்கான பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் பயிற்சி பட்டறைகள் நடைபெற்று வருகின்றன.
      
👉 "Kalai Pattarai" is an art workshop conducted on every Sunday at 3:00 PM for the creation and exploration of various forms of art, including painting, sculpture, crafts and creative activities with guidance from experienced mentors.