குழந்தைகள் நிகழ்ச்சி - " பலூன் சிற்பங்கள் வடிவமைத்தல் பயிற்சி" திரு. T. பிரகதீஸ்வரன் (Balloon Sculpture artist ) | (23.03.2025) காலை 11.00 மணி
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகள் பிரிவின் மூலம் நடத்தப்படும் வாராந்திர நிகழ்வுகளின் வரிசையில் (23.03.2025) ஞாயிறு அன்று காலை 11.00 மணிக்கு திரு. T. பிரகதீஸ்வரன், பலூன் சிற்பக்கலைஞர் , அவர்களின் "பலூன் சிற்பங்கள் வடிவமைத்தல் பயிற்சி" என்ற நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில், திரு. T. பிரகதீஸ்வரன் அவர்கள், வண்ண வண்ண பலூன்களை கொண்டு வித விதமான, பூ, இதயம் ,வாத்து , பைக் ,வாள்,டெடிபியர் ,மிக்கி மவுஸ் போன்ற வடிவங்களில் பலூன் சிற்பங்கள் செய்வது குறித்து எளிய செயல் விளக்கங்களுடன் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்தார். இந்த நிகழ்வு குழந்தைகளின் சிந்தனைகளை தூண்டவும், பலூன்கள் மூலம் புதிய வடிவமைப்புகளை உருவாக்கும் வாய்ப்பாக அமைந்தது . இந்த நிகழ்வில் ஏராளமான குழந்தைகள் பங்கு பெற்று பயிற்சி பெற்றனர் . இந்த நிகழ்வில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்