நிலவொளியில் 12/02/2025 புதன்கிழமை மாலை 6.00 மணி நடைபெற்றது
Posted by Kalaignar Centenary Library, Madurai on February 11, 2025
அனைவருக்கும் வணக்கம்!
ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தோறும் நிகழும் நிலவொளியில் என்ற நிகழ்ச்சியானது இன்று மாலை 6 மணி அளவில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் நான்காம் தளத்தில் நடைபெற்றது இந்நிகழ்ச்சி 12 வது நிகழ்ச்சியாகும் இதில் வாசகர்கள் அனைவரும் பங்கு பெற்று தனது கவிதை, கட்டுரை, கதை மற்றும் தாங்கள் படித்த புத்தகத்தின் விமர்சனம் சங்க இலக்கியம், பக்தி இலக்கியம் என பல்வேறு வகைகளில் இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு செய்தனர் இதில் கலந்துகொண்ட அனைத்து வாசகர்களுக்கும் அந்த பௌர்ணமி முழு நிலவுக்கும் எங்கள் கலைஞர் நூற்றாண்டு நூலகம் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்
Categories: Events