குழந்தைகள் நிகழ்ச்சி -"சிறுவர்களுக்கான "யானை ராஜா (சிறார் நாடகம்)" - திரு. சிவபஞ்சவன் அவர்களின்- (19.01.2025) ஞாயிறு அன்று காலை 11.00 மணிக்கு
வணக்கம் !
மதுரை, கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகள் பிரிவின் மூலம் நடத்தப்படும் வாராந்திர நிகழ்வுகளின் வரிசையில் (19.01.2025) ஞாயிறு அன்று காலை 11.00 மணிக்கு திரு. சிவபஞ்சவன் - யாக்கை மகிழ்வரங்கம் அவர்களின் "யானை ராஜா" (சிறார் நாடகம் ) என்ற நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது, இந்நிகழ்வில் திரு. சிவபஞ்சவன் ,மற்றும் குழுவினரின் யானை நாடகம் குழந்தைகள் மத்தியில் நற்சிந்தனைகளையும் ,நன்னெறிக் கருத்துகளையும் தோற்றுவிக்கும் நிகழ்வாக அமைந்தது .இறுதியில் குழந்தைகளிடம் பலூன்களை கொடுத்து , அதில் அவர்களுக்கு பிடித்த ஓவியங்களை வரையச்செய்து அதன்மூலம் கதைகளை உருவாக்குதல் போன்ற பயிற்சியையும் வழங்கினார் .இந்த நிகழ்வில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் ...