HAPPY PARENTING - திரு. டாக்டர் .J.S. பிரசன்னா கார்த்திக் ,குழந்தைகள் நல மருத்துவர் (08.12.2024) 11 AM
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகள் பிரிவின் மூலம் நடத்தப்படும் வாராந்திர நிகழ்வுகளின் வரிசையில் (08.12.2024)ஞாயிறு அன்று காலை 11.00 மணிக்கு திரு. டாக்டர் .J.S. பிரசன்னா கார்த்திக்,MD. அவர்களின் "Happy parenting" என்ற நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது,இந்நிகழ்வில் டாக்டர் .J.S. பிரசன்னா கார்த்திக் அவர்கள், குழந்தைகளின் வளர்ச்சிபடிநிலைகள்,குழந்தைகளுக்கான உணவுமுறைகள், குழந்தையுடன் பெற்றோர்கள் நேரத்தைச் செலவிடுவது, குடும்பமாக சேர்ந்து உணவு உண்ணுதல் , விளையாட்டில் குழந்தைகளை பங்குபெறச்செய்தல் , படுக்கை நேரத்தில் கதைசொல்லுதல் போன்ற குழந்தை வளர்ப்பு தொடர்பான தகவல்கள் மற்றும் அறிவுரைகளை பெற்றோருக்கு வழங்கினார் , நிகழ்வின் இறுதியாக பெற்றோர்களின் கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு சிறந்தமுறையில் விளக்கம் அளித்தார் .இந்த நிகழ்வில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் .