"தேசிய நூலக வாரம் ( NOV 14- 20 )" விழாவினை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள்- (16.11.2024 ) சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு

Posted by Kalaignar Centenary Library, Madurai on November 14, 2024

 வணக்கம் , பொது நூலக இயக்ககம்  ,கலைஞர் நூற்றாண்டு நூலகம் -மதுரை ,  "தேசிய நூலக வாரம்  ( NOV 14- 20 )" விழாவினை  முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சியாக  (16.11.2024 ) சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு குழந்தைகள் நிகழ்ச்சி அரங்கில் " நான் விரும்பும்  நூலகம் " என்ற தலைப்பில் குழந்தைகளுக்கான  பேச்சு போட்டி  மற்றும்  கட்டுரை போட்டிகள்  நடைபெற உள்ளது , இந்த நிகழ்வில் விருப்பமுள்ள குழந்தைகள் கலந்துகொள்ளுமாறு  அன்போடு அழைக்கின்றோம் .சிறந்த  கட்டுரைகள்  மற்றும் பேட்சாளருக்கு  சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளும் ,பங்குபெறுவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்படும் .

 குறிப்பு :- 

1. வயது (age ) 10  முதல் 14  வரை உள்ளவர்கள் மட்டும் இந்த போட்டியில்  கலந்துகொள்ள  அனுமதிக்க படுவார்கள். 

2. தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில்   கலந்து கொள்ளலாம் ,

3.பேச்சுப்போட்டிக்கு  ஒருவருக்கு  அதிகபட்சமாக  5 நிமிடங்களும்  ,கட்டுரைகள் எழுதுபவர்கள்   2 பக்கங்களுக்கு மிகாமலும்  இருக்க வேண்டும் .

4.கட்டுரைகளை  வீட்டில் இருந்து எழுதி கொண்டு வர அனுமதி இல்லை .

5. முன்பதிவு  செய்தவர்கள் மட்டும் இந்தநிகழ்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள் .

முன்பதிவுக்கு:  https://tinyurl.com/Library-week-Kids-programs



Categories: