"திருவள்ளுவர் சிலை - வெள்ளி விழா" கொண்டாட்டத்தை முன்னிட்டு புகைப்படக் கண்காட்சி ,கருத்தரங்கம் மற்றும் பரிசுப்போட்டிகள் (23.12.24 முதல் 31.12.24 வரை )
வணக்கம் !
தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை , பொதுநூலக இயக்ககம் சார்பில் நடத்தப்படும், "திருவள்ளுவர் சிலை - வெள்ளி விழா" கொண்டாட்டத்தை முன்னிட்டு புகைப்படக் கண்காட்சி ,கருத்தரங்கம் மற்றும் பரிசுப்போட்டிகள் (23.12.24 முதல் 31.12.24 வரை )கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறவிருக்கின்றன . அந்தவகையில் குழந்தைகளுக்கான “திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி” (28.12.24) சனிக்கிழமை அன்று காலை 11.00 மணிக்கு நடைபெறவுள்ளது . வெற்றிபெறுபவர்களுக்கு ரொக்கப்பரிசுகள் வழங்கப்படவுள்ளது எனவே, விருப்பமுடைய குழந்தைகள் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றி ...
அனுமதி இலவசம் !
குறிப்பு :
1.) திருக்குறள் ஒப்புவித்தல் ஏதேனும் 5 அதிகாரம் .
2.) 14 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் .
3.) முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டும் அனுமதி உண்டு .* நிபந்தைகளுக்கு உட்பட்டது .
திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி முன்பதிவிற்கு: https://tinyurl.com/ys9chmrh